ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘கர’ திரைப்படம் – எப்போது? எந்த தளத்தில்?
தனுஷ் நடித்த ‘கர’ திரைப்படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கிய இந்த ஆக்சன் திரில்லர் படம், 1990களின் வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 28ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளதுடன், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படம், 1990களில் ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியுடன் ஆக்சன் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டு தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கர’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.