கடகம் ராசிபலன்: புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்!
n: கடக ராசியினருக்கு இன்று அனுகூலமான நாளாக அமையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், புனர்பூசம் நட்சத்திரத்தினரின் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.
கடக ராசி அன்பர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக அமையும். சகோதரர்கள் தொடர்பாக எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடிவடையும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு எதிர்பாராத அல்லது தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.
வியாபாரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் சக வியாபாரிகள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானமாக செயல்படுவது நல்லது.
நட்சத்திர பலன்: புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

1 Comments
NOT BAD